உள்நாடு

நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் ஏற்றப்பட்டுள்ள சிக்கல்!

(UTV | கொழும்பு) –

BE INFORMED WHEREVER YOU ARE

கடும் வறட்சியான காலநிலை காரணமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது. நீர்வழங்கல் சபையின் பிரதி முகாமையாளர் ஆர். எம். எஸ். ரத்னாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், நிலத்தடி நீரின் சுவை, மணம் அல்லது நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நீர் மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் உப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படக் கூடும் என்பதால் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நிலத்தடி நீரில் அவ்வாறான மாற்றம் ஏற்பட்டால் கொழும்பு, புத்தளம், அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பரிசோதனை கூடங்களில் நீர் மாதிரிகளை மக்கள் பரிசோதிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

editor

வசமாக சிக்கிய காதர் மஸ்தான்

editor

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் தலைமறைவு!

editor