வகைப்படுத்தப்படாத

‘ஓசியன் சீல்ட்’ இன்று திருகோணமலை வந்தது

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவின் மிகப்பெரிய கப்பலான ‘ஓசியன் சீல்ட்’  இன்று திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டே இந்தகப்பல் திருகோணமலை சென்றுள்ளது.

சிறந்த உறவு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில்  இணைந்து செயற்படும் நாடுகள் என்ற அடிப்படையில் இந்தக்கப்பலின் பயணம் அமைந்துள்ளதாக அந்த நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கப்பலுக்கு தலைமை தாங்கி வந்துள்ள எயார் மார்சல் ஒஸ்போர்ன் கருத்து வெளியிடுகையில் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையினர் எப்போதும் இல்லாத வகையில் பலத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் எவரும் திருப்பியனுப்பப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கால நிலை

රුහුණු විශ්වවිද්‍යාලයේ පීඨ කිහිපයක අධ්‍යයන කටයුතු අද ඇරඹේ

Final verdict of Gamini Senarath’s case on Aug. 08