வகைப்படுத்தப்படாத

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24ம் திகதி

(UDHAYAM, COLOMBO) – நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டின் கீழ் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று ஆராயப்பட்டது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் எச்.சீ.ஜே மடவல ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதற்கமைய அது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கான தினம் எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது அதற்கு அவதூறு ஏற்படும் வகையில் செயற்பட்டமை தொடர்பாக கலகொடஅத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

இத்தாலியில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

“Youth must act responsibly with their vote” – Dilum Amunugama

வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம்