உள்நாடு

விகாரையை நிறுத்திய கிழக்கு ஆளுனருக்கு எதிராக கொதித்தெழும் தேரர்கள்!

(UTV | கொழும்பு) –

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை நடைபெற்றுள்ளது.

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ”சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தைக் குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம்.”’வரலாற்றுச் சான்றுகளை கிளறுகின்றார் இரா.சம்பந்தன்.”’புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப்பணியை நிறுத்த சம்பந்தன் யார்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி

IMF யின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை – உதய கம்மன்பில.