வகைப்படுத்தப்படாத

பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் முறை தொடர்பில் அறிக்கை கோரல்!

(UDHAYAM, COLOMBO) – உயர்கல்விக்காக பிரபலமான பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் முறை தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் , உயர்கல்விக்காக வேறு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்காக இடம்பெறும் நேர்காணலின் போது அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும் முறைகள் மற்றும் பாடசாலையின் ஊடாக குறித்த மாணவரிடம் அறவிடப்படும் பணம் தொடர்பில் ஒரு விரிவான அறிக்கையை பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சில பாடசாலைகளின் நேர்காணல் இடம்பெறும் முறை மற்றும் மாணவர்களிடம் பணம் அறவிடப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பௌத்த தேரர் ஒருவர் உட்பட 8 பேர் கைது

15 வருடங்களின் பின் பணிப்பெண்ணுக்கு 49 இலட்சம் ரூபா

2019 අවසාන චන්ද්‍රග‍්‍රහණය හෙට