உள்நாடுசூடான செய்திகள் 1

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்

(UTV | கொழும்பு) –

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ  இங்கிலாந்து சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர்  இங்கிலாந்து சென்றுள்ளார்.அடுத்த வாரம் அவர் இங்கிலாந்தில் ஆராதனை நிகழ்வொன்றை  நடத்தவுள்ளார். இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், போதகருக்கு எதிரான  பயணத்தடையை குடிவரவு துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். குடிவரவுதுறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கவேண்டும்,இலங்கைக்கு அவர் திரும்பினால் அவரை கைது செய்து சிஐடியினரிடம்  ஒப்படைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

editor

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயர் முன்வைப்பு! கூட்டத்தில் என்ன நடந்தது?

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG ஒரே நேரத்தில் நியமனம்

editor