உள்நாடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் : நிராகரித்த இலங்கை அரசு

(UTV | கொழும்பு) –

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும், தமது பேரவையின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு விஜயம் செய்து தொடர்புகளை பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த தசாப்தத்தில் பேரவையின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளை ஊக்குவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (19) ஆரம்பமான இந்த அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு தொடர்பான செயற்குழுவின் அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வவுனியா இரட்டை கொலை : சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க சிஐடிக்கு அனுமதி – கடவுச் சீட்டுக்களும் முடக்கம்

“போலி ஆவணம் மூலம் பாராளுமன்றிற்கு வந்த வெளிநாட்டு பெண்” நடவடிக்கை அவசியம் – முஜீபுர் ரஹ்மான்

எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor