உள்நாடுவணிகம்

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF

இந்த இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினருடன் அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, “இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதியாகவுள்ளது. நெருக்கடியை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பங்களிப்பை வழங்குவது இப்போது முக்கியமாகும்” என ஜோர்ஜீவா இலங்கைக் குழுவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“முடி உலர்த்தி” மூலம் முடியை உலர வைத்த புத்தள இளைஞன் மரணம்!

சாதாரண பரீட்சையிலும் எரிபொருள் நெருக்கடி..

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

editor