உள்நாடு

வாழைப்பழங்கள் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  வாழைப்பழங்கள் விலை அதிகரிப்பு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் விற்பனையாகும் வாழைப்பழ வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில். ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலை 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் மொத்த விலை 270 ரூபாவாகும்.
இது தவிர ஒரு கிலோ சீனி வாழைப்பழத்தின் சில்லறை விலையும் 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஆனால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புளி மற்றும் சீனி வாழைப்பழத்தின் மொத்த விலை 140 முதல் 150 ரூபா வரை பதிவாகியுள்ளது.
வாழைப்பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால், பல கிராமங்களில் ஒரு கிலோ புளி மற்றும் சீனி வாழைப்பழத்தின் சில்லரை விலை 100 முதல் 150 ரூபா வரை உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் – இறுதித் தீர்மானம்

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor