உள்நாடு

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை

நாட்டிலுள்ள குடிவரவுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிழையை சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் , ஒருநாள் சேவையின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் ஊடாக அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

editor

இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ஆதரிக்க தீர்மானம் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor

மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

editor