உள்நாடு

பெஹலியகொட மீன் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது.

(UTV | கொழும்பு) – பெஹலியகொட மீன் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும் அதிகளவில் வணிக வளாகத்துக்கு வருவதாகவும் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம், ஒரு கிலோ தலபத் மீன் கிட்டத்தட்ட 3,000 ரூபாவுக்கு விற்கப்பட்டது, ஒரு மாதத்திற்கு முன்பு 600 முதல் 700 ரூபா வரை விற்கப்பட்ட ஒரு கிலோ சாலை மீன் தற்போது 350 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

மேலும், லின்னா, பலயா என்பவற்றை கிலோ ரூ.800க்கு வாங்கலாம் என்றார்.
இந்த நாட்களில் இறால் மற்றும் கணவாய் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor

அங்கொட லொக்காவின் ‘கழுகு’ கைது

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பி – பிடியாணையை மீளப்பெற உத்தரவு

editor