உள்நாடு

2023ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று!

(UTV | கொழும்பு) –  இன்று (08) 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இன்றுடன் குழுவிவாதம் நிறைவடைந்து மாலை 05.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சராக கடந்த நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து,

2023 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15 முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.

அதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 84 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதாக துருக்கி தூதுவர் தெரிவிப்பு

editor

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு