உள்நாடு

ஜனவரி முதல் மின் கட்டண கொடுப்பனவுகள் காகிதத்தில் இல்லை? – டிஜிட்டல் முறையிலா?

(UTV | கொழும்பு) – ஜனவரி முதல் மின் கட்டண கொடுப்பனவுகள் காகிதத்தில் இல்லை.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுடன் இன்று நாடளாவிய ரீதியில் இணையவழி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் மின்சார சபையின் செலவுகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் மேலும் செலவுகளை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம், முதல் அனைத்து வாடிக்கையாளர்களிற்கும் காகிதமில்லா பில் கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தவும், மேலும் தெருவிளக்குகள் பொருத்துதல் மற்றும் இயங்குவதை ஒழுங்குபடுத்துதல் பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அத்துடன் இலங்கை மிசார சபையினால் செய்ய முடியாத வேலைகளை உள்ளுராட்சி சபைகளின் உதவியுடன் மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சர், கஞ்சன விஜேசேகர அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்

MV x’press pearl கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும்

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்