உள்நாடு

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கத்தேவையில்லை!

(UTV | கொழும்பு) –   ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கத்தேவையில்லை!
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் ஊடாக ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை தனது வீட்டில் இருந்தபடியே திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க முடியும் எனவும் , இதேவேளை, கைரேகை போன்ற விடயங்களுக்காக மாத்திரம்  விண்ணப்பதாரர் திணைக்களத்துக்கு வரவேண்டியிருக்கும் எனவும் ,

மேலும், இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கைரேகைகளைப் பெறுவதற்காக 50 முகப்பு அலுவலக மையங்களை நிறுவ திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை – ஜனாதிபதி பணிப்பு

இன்று நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளை நடத்த தடை