உள்நாடு

எரிபொருள் இறக்குமதி பணிகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –     சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட எரிபொருள் அடங்கிய சூப்பர் ஈஸ்டர்ன் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது.

இதன்படி, குறித்த கப்பலின் டீசல் இறக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்

நம் நாட்டு விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான நன்கொடையாக சீன அரசால் இலங்கைக்கு இந்த டீசல் கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் , உயர் பருவ அறுவடை ஆரம்பிக்கும் வரை குறித்த டீசல் கையிருப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரிய டீசல் எதிர்காலத்தில் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பெரும்பான்மையான மக்கள் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர் – சஜித் பிரேமதாச

editor

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு

இலங்கை இன்னொரு மொரோக்கோவாக மாற வேண்டாம் – மஹிந்த