வகைப்படுத்தப்படாத

புதிய வரிச்சலுகை திட்டம் – நிதி அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – புதிய முதலீடுகள் தொடர்பில் புதிய வரிச்சலுகை திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி முகாமைத்துவ அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது விடயம் தொடர்பான வர்த்தமான அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் சிறிய. நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சியாளர்களின் நன்மை கருதி இந்த வரிச்சலுகை அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.

முதலீடுகளை ஊக்குவிப்பதே இந்த நோக்கதின் திட்டம் என்று சுட்டிக்காட்டினார். இதன்மூலம் பல வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதும் மற்றுமொரு நோக்கமாகும்.

வருமான வரி அறிவிடுவதற்கான புதிய கட்டமைப்பு ஒன்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

வரி வீதங்கள் மூன்று கட்டங்களின் கீழ் அமுல்படுத்தப்படும் , கம்பனிகளிடமிருந்து அறவிடப்படும் வரிக்கு விலக்களிக்கப்படும்,தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் விருத்தி சேவைகளின் ஏற்றுமதி, தங்க ஆபரண மற்றும் மாணிக்கக்கல் ஏற்றுமதி துறைகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கும் வரி விலக்களிக்கப்படும். சேதன பசளை உற்பத்தி, கழிவு முகாமைத்துவம், கோழிப்பண்ணை மற்றும் பால் உற்பத்தி துறைகளுக்கும் வரி விலக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Suspect injured after being shot at by Army dies

முன்னாள் பெண் அதிபருக்கு 30 ஆண்டு சிறையா?

“Promoting peace and coexistence is important than Ministerial portfolios” – Rishad