உள்நாடு

ரஞ்சன் அமெரிக்கா செல்கிறார்

(UTV | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்க இன்று (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டதாக விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 03.50 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானமான KR-663 இல் கத்தாரின் தோஹாவிற்கு முதலில் புறப்பட்டார்.

அங்கிருந்து வேறு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவில் சுமார் 10 கச்சேரிகளிலும், கனடாவில் 05 கச்சேரிகளிலும் பங்கேற்க உள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க 10/27 இரவு அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட விமானத் தடை காரணமாக பயணம் தோல்வியடைந்தது.

Related posts

“இவ்வருடம் அரச துறையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது” ஜனாதிபதி ரணில்

ஏறாவூரில் கோழிகள் ஏற்றிச் சென்ற படி ரக வாகனம் விபத்து

editor

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்