(UTV | கொழும்பு) – வனஜீவராசிகள் திணைக்களத்தின் வழிகாட்டிகள் இன்றி தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்கள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யால தேசிய பூங்காவில் அஜாக்கிரதையாக சிலர் வாகனங்களை ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளதாகவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சம்பவத்தின் போது கடமையில் இருந்த ஆறு சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
