உள்நாடு

பாண் விலை குறையுமா

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவில் இருந்து 265 ரூபாவாக குறைக்கப்பட்டாலும் பாண் மற்றும் பன்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

ஒரு கிலோ மாவை 250 ரூபாவிற்கு இலகுவாக வழங்க முடியும் என்ற நிலையில் இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை அதிகரிப்பது மிகவும் அநியாயமானது எனவும் அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்களை நசுக்குவதாகவும் ஜயவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைப்பதற்கு அரசாங்கத்தின் தலையீடு நிச்சயம் தேவை எனவும், இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 320 மற்றும் 285 ரூபாவிற்கு விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்டி வருவதாகவும் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

Related posts

கொவிட் மீண்டும் தலைதூக்குகிறது

11 வழிபாட்டு தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு