உள்நாடு

ஈஸ்டர் வழக்கு: 10 வாரங்களுக்கு மைத்திரிக்கு காலக்கெடு

(UTV | கொழும்பு) –  ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு விசாரணையை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

அதற்குள் மனுதாரர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாரபட்சமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த தீர்மானம் அறிவிக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

MV Xpress pearl இன்று ஊழியர்களிடம் வாக்குமூலம்

புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு வருகை!

அரசுப்பணியிலுள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்