உள்நாடு

தேசிய பேரவையிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்

(UTV | கொழும்பு) – தேசிய பேரவையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்.

அவரது விலகலினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தேசிய பேரவையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையைப் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இப்பிரேரணை எதிர்ப்பு இன்றி ஏகமனமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இந்த தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றும் விசேட கலந்துரையாடல்

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம்!

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்