உள்நாடு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஊவா, வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுகின்ற அதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Related posts

அம்பலாந்தோட்டையில் மூவர் கொலை செய்த சம்பவம் – 5 பேர் கைது

editor

இன்று முதல் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

சனல் 4 விவகாரம் தொடர்பில் ஏற்படவுள்ள நிலை – உதய கம்மன்பில.