உள்நாடு

அஹுங்கல்லவில் துப்பாக்கி பிரயோகம்: இருவர் காயம்

(UTV | பலபிட்டிய) –   அஹுங்கல்ல, போகஹாபிட்டிய பிரதேசத்தில் நேற்று (23) இரவு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொஹகபிட்டிய, உரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே குறித்த இருவரும் மீதும் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் 24 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கு 12 போர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நேற்றைய 600 PCR பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியாகும்

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை.

கடந்த 24 மணிநேரத்தில் 139 பேர் கைது