உள்நாடு

கோதுமை மாவின் விலை குறையும்

(UTV | கொழும்பு) – ஆர்டர் செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறையும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட கோதுமை மாவின் சரக்குகள் கடந்த வாரம் முதல் நாட்டிற்கு வந்துள்ளன.

கடந்த மாதங்களில் இரண்டு பிரதான கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் செய்யாமையினால், நாட்டில் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், இதன் காரணமாக ஒரு கிலோகிராம் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.

எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை ஆர்டர் செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரசியல்வாதியின் சிபாரிசில் தந்த பதவி வேண்டாம் – ராஜினாமா செய்த உறுப்பினர்

editor

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு

editor

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை