கேளிக்கை

‘நானே வருவேன்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

(UTV |  புதுடில்லி) – இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ‘நானே வருவேன்’ திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் திகதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். தொடர்ந்து தனுஷ் படத்தின் அறிவிப்புகள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அபர்ணதிக்கு ஆர்யா செய்த ஸ்பெஷல்

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..

reema lagoo உயிரிழந்தார் – [VIDEO]