உள்நாடு

தாமரை கோபுரத்தினா மூன்று நாட்களுக்கு கிடைத்த வருமானம்

(UTV | கொழும்பு) – தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்ததன் பின்னர் முதல் வார இறுதியில் (சனிக்கிழமை) மாத்திரம் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

டிக்கெட், உணவு மற்றும் பானங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் வருமானம் கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்

தாமரை கோபுரத்தின் அதிசயத்தை காண நேற்று (17) சுமார் ஐம்பது வெளிநாட்டவர்கள் உட்பட 7,300 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து செயல் அலுவலர் மேலும் கூறியதாவது; கடந்த 15ம் திகதி முதல், பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்ட மூன்று நாட்களாக கிடைத்த வருவாய், 70 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளதாகவும், இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் 35வது கொரோனா மரணம் பதிவானது

பொலிஸ் அதிகாரிக்கு அவசர அழைப்பு- கஞ்சிபானை இம்ரான்!

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியரை அங்குரார்ப்பணம்.