உள்நாடு

இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்திற்கு ரஷ்யா ஆதரவு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாளை (20) Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ரஷ்ய எரிசக்தி அமைச்சர் மற்றும் இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை, எரிபொருள் விநியோகம் தொடர்பாக ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் உயர் மட்டத்தில் உள்ளன. அண்மையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அவர் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சரையும் சந்தித்தார், அங்கு இலங்கையின் போக்குவரத்தை சீரமைக்க அதிகபட்ச ஆதரவை வழங்குவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நாட்டின் புகையிரத போக்குவரத்தை நெறிப்படுத்துவதற்கு சில புதிய புகையிரத மின் பெட்டிகளை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ரஷ்ய போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு ரஷ்ய அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Related posts

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

பாதையை மாற்றினால் பாதிப்பு தான் ஏற்படும் – ஜனாதிபதி ரணில்

editor

18 – 19 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு