உலகம்

உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் மதிப்பிலான ஆயுத உதவி – அமெரிக்கா

(UTV |  வாஷிங்டன்) – உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 6 மாதத்தை கடந்துள்ளது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரேனிய ராணுவத்திற்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படும்.

வெள்ளை மாளிகை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இலவசமாக வழங்க நடவடிக்கை

editor

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

எந்தவொரு பதில் தாக்குதல்களிளும் அமெரிக்கா இணையப் போவதில்லை