உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகவே அவர் சென்றுள்ளார்.

இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அதில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கல்வியமைச்சரை சந்திக்கவுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள்

editor

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..