உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தை மீட்பதில் மேலும் தாமதம்

(UTV | கொழும்பு) – ரயில் தடம் புரண்டதால், கரையோர ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கசந்துறையில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் நேற்றிரவு கொள்ளுப்பிட்டிக்கு அருகில் ரயில் நிலையத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது தடம் புரண்டது.

புகையிரத பாதை பாரியளவில் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதையினை சீர் செய்யும் பணி ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், பணி மேலும் தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கரையோர புகையிரதத்தில் பயணிக்கும் புகையிரதம் ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்

தபால் சேவை நவீன மயமாக்கலுக்காக 2085 மில்லியன் ஒதுக்கீடு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor