உள்நாடு

ஆதிவாசிகளின் குடும்பங்களின் பிள்ளைகளும் மந்தபோசன நிலைக்கு

(UTV | கொழும்பு) – ஆதிவாசிகளின் குடும்பங்களின் பிள்ளைகளும் மந்தபோசன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.

ஆதிவாசி மக்களின் கஷ்டங்கள், தேவைகள் குறித்து கவனம் செலுத்த யாரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைகளின் உடல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சத்துணவுகள், ஆரோக்கியமான ஆகாரங்கள் இல்லாதமை காரணமாக உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும், தமக்கான ஆகாரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரம் பற்றாக்குறை காரணமாகவும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களினால் விவசாயம், கிழங்கு உணவுகளை உற்பத்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

பெரும்பாலான தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

ஸ்பா நடத்துவதில் புதிய சட்டம்

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு