உள்நாடு

IMF உடன்படிக்கை மறைக்கப்படுகிறதா?

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று (13) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, அமைச்சரவை, எதிர்க்கட்சித் தலைவர், கோப் மற்றும் கோபா உள்ளிட்ட நிதிக் குழுக்களின் தலைவர்களுக்கு இது முன்வைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

“அதை மறைப்பதற்கில்லை. அந்த உண்மைகள் அனைத்தும் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும்” என்று ரமேஷ் பத்திரன மேலும் கூறினார்.

Related posts

சம்பிக்க உள்ளிட்ட 5 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

அளுத்கமவில் மூன்று மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

editor

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு