உலகம்

‘ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை’ : இளவரசர் ஹாரி

(UTV |  இலண்டன்) – இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.

தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8ம் திகதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.

இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக இணைந்து, விண்ட்சார் கோட்டையின் வாயிலில் ராணிக்கு மலரஞ்சலி செலுத்திய பொதுமக்களிடம் பேசி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் மறைந்த தனது பாட்டியும், ராணியுமான எலிசபெத் தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக ஹாரி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தங்கள் ஆர்க்வெல் இணையதளத்தில் அவர், ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை மற்றும் கண்ணியத்துடன் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், ராணுவ தளபதியாக ராணியை முதன்முதலில் சந்தித்தது, தனது அன்பான மனைவியை ராணி முதன்முதலில் சந்தித்து, அன்பான கொள்ளுப் பேரக்குழந்தைகளை (தனது குழந்தைகள்) கட்டிப்பிடித்த முதல் தருணம் போன்றவற்றை குறிப்பிட்டும் நெகிழ்ச்சியடைந்து உள்ளார்.

Related posts

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

இத்தாலி ஜெட் விமான விபத்தில் எட்டு பேர் பலி

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !