உள்நாடு

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த முதல் செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்

(UTV | கொழும்பு) – கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த முதலாவது செயற்பாட்டாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நேற்று (08) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கடந்த ஜூன் 13ஆம் திகதி பிரதமர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்ட மற்றுமொரு செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களான ரொஷான் பிரசாத் தாபரே மற்றும் கலும் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

Related posts

பண்டிகையினை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு

2021 வரவு செலவு திட்டம் : ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி