உள்நாடு

வாய்க்காலில் சிக்கி பாடசாலை மாணவன் பலி

(UTV | கொழும்பு) – குருநாகல், வேஹெர பிரதேசத்தின் பக்க வீதியில் பள்ளத்தில் தவறி விழுந்து 14 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) மதியம் 2:00 மணியளவில் பள்ளி முடிந்து பக்கவாட்டில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த இந்த மாணவன், குறுகலான இடத்தில் சாலையில் வந்த வாகனத்திற்கு இடம்விட்டு பாதையில் அருகே இருந்த வாயய்க்காலில் விழ நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளான்.

குருநாகல் மாநகர சபை ஊழியர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து பாடசாலை மாணவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடிகாலின் கான்கிரீட் தளம் பேக்ஹோ இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு மாணவன் மீட்கப்பட்டதாகவும், அப்போது அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் வழங்க தீர்மானம்

editor

அஷ்ரபை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, உடன் ஹரீஸ் எம்.பி. கைவிட வேண்டும் – ஆசாத் சாலி

இந்தியாவில் இருந்து ஒருதொகை அரிசி இலங்கைக்கு