உள்நாடு

‘IMF இன் இசைக்கு நடனமாடும் அரசு’ – தேசிய மக்கள் சக்தி

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் வரிகளை அதிகரித்து பொதுமக்களுக்கு சுமைகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கிறது.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், புதிய வரிகளை அறிமுகம் செய்தல், VAT வீதம் உட்பட ஏற்கனவே உள்ள வரிகளை அதிகரிப்பது, ரூபாயை மிதக்கச் செய்தல் மற்றும் அரச அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரச அமைப்புகளை தனியார் மயமாக்குவதையும், மக்கள் மீது சுமத்தப்படும் திட்டங்களையும் அவர்கள் ஆதரிக்க முடியாது என்றார்.

கடந்த காலங்களில் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டங்களை எதிர்த்ததாகவும், அது இறுதியில் தனியார்மயத்திற்கு வழிவகுக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

Related posts

-சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!

கடை உணவுகளுக்கு விலை அதிகரிப்பு

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்