விளையாட்டு

பாகிஸ்தான் அணியில் வாஸிமிற்கு பதிலாக ஹசன் அலி

(UTV |  லாஹூர்) – பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாஸிம் காயமடைந்துள்ளார். எனவே, இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2020 கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியும் காயம் காரணமாக இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். பாகிஸ்தானின் முதல் போட்டி நாளை (28) இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ளது.

Related posts

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

ஆசிய க்ராண்ட்பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை மெய்வல்லுனர்கள் 12 பேர்

IPL : தூக்கியெறியப்பட்ட குசல்