உள்நாடு

இன்று மாலை ரஞ்சனுக்கு புதிய பதவி

(UTV | கொழும்பு) – சிறைச்சாலையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், அவருக்கு இன்று மாலை புதிய நியமனம் கிடைக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாக வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய பதவி தொடர்பில் இன்று மாலை மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதியின் செயலாளர் இன்று காலை கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

கெஹலிய விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு

குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு புதிய ஜெனரல்