உள்நாடு

சமன் பெரேராவுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –  கைது செய்யப்பட்ட எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 5ஆம் திகதி தங்காலை பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொன்று மேலும் இருவரைக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை மறைப்பதற்கு உதவிய குற்றத்திற்காக அவர் நேற்று (24) கைது செய்யப்பட்டார்.

தங்காலை பொலிஸார் சந்தேக நபரை கொஸ்கொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்து தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய சபைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை

editor

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம்