உள்நாடு

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ – மூவர் கைது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை உடைத்து தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் மூவரும் நேற்று (01) இரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் பதிவா தெரிவித்தார்.

18 மற்றும் 22 வயதுடைய சந்தேகநபர்கள் மடபாத மற்றும் கொழும்பு 05 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

புகையிரத பாதையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

மன்னார் போராட்டம் 47வது நாளாக தொடர்கிறது

editor