உள்நாடு

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதற்கமைவாக, பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் சமூகக் கூடுகைகள் போன்றவற்றில் அடிமட்ட அறிகுறிகளுடன் கூடிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இலங்கையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் அவர்களை நோயாளிகள் என உறுதிப்படுத்தும் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லை எனவும் இதன் காரணமாக நோயாளர்களை அடையாளம் காண்பதில் பாரிய சிக்கல்கள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணாமை, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளினால் எதிர்வரும் பதினைந்து நாட்களில் அதிகளவான கொவிட் நோயாளிகள் பதிவாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கடும் மழையால் திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

editor

அரச நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்சம் கோரும் நடவடிக்கைகளுக்கு முடிவு

IMF உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம்