உள்நாடு

இன்றும் மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நேற்றைய தினம் தீவை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது பல்வேறு பகுதிகளில் எரிவாயு வாங்கும் வரிசை முடிவுக்கு வந்துள்ளது என்றார்.

தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்திற்காக ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உலகின் மிக வேகமாக பரவும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும்

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்