உள்நாடு

“IMF பேச்சுகளில் உயர் முன்னேற்றம்” – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்து நல்லதொரு பொருளாதார நடைமுறையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. .

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைய, கடன் நிலைத்தன்மை குறித்த முறையான திட்டம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சமீபத்திய அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படாத முந்தைய அரசாங்கத்தின் அரசியல் கொள்கை காரணமாக, அது தடைபட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் முழுமையான அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகவும், சர்வகட்சி ஆட்சிக்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

Related posts

விமான நிலையம் ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் சிறந்த விமான நிலையமாக இயங்கும்- அமைச்சர் நிமல்

கலாநிதி விவகாரம் – சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்