உள்நாடு

கொவிட் பரவல் : ராகம ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்று காரணமாக, ராகம ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் கவுண்டர்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு பணிபுரியும் ரயில் நிலைய அதிபர் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் இரண்டு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் ராகம ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கவுண்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அது தவிர ரயில் நிலைய எஞ்சிய பணிகள் வழக்கம் போல் நடந்து வருவதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்காலத்தில் இனிமேல் இரத்த வெள்ளம், மரண அச்சம் போன்றவை இடம்பெறாதிருக்கட்டும்

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

editor

முதலாவது அமைச்சரவை கூட்டம் புதனன்று