உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்றும் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்றும்(27) மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A முதல் W வரையான வலையங்களில் பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு நகர் உள்ளிட்ட வணிக வலையங்களில் காலை 06 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 05 மணி முதல் காலை 08 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

பஸ் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு

editor

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!