உள்நாடு

காலிமுகத்திடல் தாக்குதலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டிக்கிறது

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல சட்டத்தரணிகள் தமக்கு அறிவித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சட்டத்தரணி நுவான் போபகே உட்பட பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், இது தொடர்பில் இராணுவத் தளபதிக்கு செய்தியொன்றை அனுப்பியதாகவும், தேவையில்லாமல் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதன் மூலம் இமேஜை மேம்படுத்த முடியாது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மீன்பிடி படகில் கடத்தப்பட்ட 120 கி.கி. ஐஸ், ஹெரோயின் – 6 சந்தேகநபர்கள் ஆழ்கடலில் கைது

editor

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவானார்

editor