உள்நாடு

ரயில் சேவைகள் மந்தகதியில்

(UTV | கொழும்பு) – பல ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை மீளப் பெற்றுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில் புகையிரத பொது முகாமையாளர் உட்பட புகையிரத அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் ஏறக்குறைய 05 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

புகையிரத திணைக்கள ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் ரயில்கள் சீராக இயங்கும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில்வே யார்ட் ஊழியர்கள் மற்றும் என்ஜின் ஓட்டுனர்களில் ஒரு பிரிவினர் பணிக்கு வருமாறு எரிபொருள் கோரி இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, நேற்று இயக்கப்பட இருந்த 280 ரயில் பயணங்களில் 50 பயணங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

Related posts

வீதி விபத்தில் மூவர் பலி

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு