உள்நாடு

நாளை முதல் பொது போக்குவரத்து சேவை இடம்பெறும் விதம்

(UTV | கொழும்பு) – நாளை (04) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேரூந்துகளின் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேரூந்துகளை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையே காரணம் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை அதிகபட்ச கொள்ளளவுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அனைத்து ரயில்களையும் இயக்க போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், புகையிரத ஊழியர்கள் தமது தனியார் வாகனங்களில் கடமைக்கு வருவதற்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக புகையிரத சேவைகள் மேலும் தடைபடலாம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

Related posts

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

வரவு – செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – துமிந்த திஸாநாயக்க

editor

மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor