உள்நாடு

SLPP உள்ளக கலந்துரையாடல்களுக்கு பசில் அழைப்பு

(UTV | கொழும்பு) –   ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பல விசேட உள்ளக கலந்துரையாடல்கள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில், கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் கலந்துரையாடல்களுக்கு தலைமை தாங்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தொழிற்சங்கங்கள், உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்த பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கட்சியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

editor

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று தீர்மானம்