உள்நாடு

மின் கட்டண அதிகரிப்பும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும்

(UTV | கொழும்பு) – மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 1 முதல் 30 அலகு வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணமான 30 ரூபாயை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாவை முன்மொழிந்திருந்தது.

அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் விலையை 2 ரூபா 50 சதங்களாலும் அதிகரிப்பதற்கு, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையமும் இதே பரிந்துரையை அளித்துள்ளது.

ஒரு அலகு மின்சாரத்தின் விலையை 2.50 ரூபாவால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை 1100 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 300 ரூபாவை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், தற்போது 4 ரூபா 85 சதமாக உள்ள 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் விலையை 12 ரூபா 50 சதங்களால் அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ள போதிலும், 10 ரூபாய் கட்டண திருத்தத்தை மாத்திரமே பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Related posts

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

editor

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்